சந்திப்போமா, இன்று சந்திப்போமா : எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிருந்து பிடிச்ச முதற் படப்பாட்டே சித்தி படத்தில் இடம்பெற்ற 'சந்திப்போமா, இன்று சந்திப்போமா' பாடல்தான். இப்பாடலைப் பாடியவர் அமரர் P.B ஸ்ரீநிவாஸ். அல்லும் பகலும் இப்பாடலை றேடியோவில் இப்பாடலை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். இதுபற்றி முன்னைய பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளேன்.
பால் வண்ணம் பருவம் கண்டு : அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களில் இடம்பெறும் பாடல்கள் சிறப்பாக இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதானே. இப்பாடல் 'பால் வண்ணம் பருவம் கண்டு' எம்.ஜி.ஆர் அவர்களின் பாசம் படத்தில் இடம்பெற்றது.
வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா, கண்ணா : திருமணமான தம்பதிகளிடையே வரும் ஊடலில் 'பிள்ளை விடு தூது' இன்றியமையாத சிறப்பான பங்கை வகிக்கும். சிறுவயதில் நீங்களும் இதைக் கண்டு பெற்றோரிடம் கண்டு இரசித்திருப்பீர்கள். "தம்பி, இந்த சாப்பாட்டை அவரிட்டைக் கொண்டுபோய்க் கொடுத்திட்டு வா" நாங்களும் அப்பாவிடம் கொண்டுபோய்க்கொடுக்க அப்பா திருப்பி "தம்பி, அவவிட்டை சாப்பாடு வேண்டாமென்று போய்ச் சொல்" . இப்பாடல் 'வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா, கண்ணா', அவ்வகையைச் சேர்ந்தது. இனிப் பாடலைப் பாருங்கள்.
நீங்கள் உங்களிடமுள்ள திறமைகளை பட்டியலிட்டு நிரல்படுத்தி தகைமைத் திரட்டு (Resume)உருவாக்கி வைப்பதென்பது இன்றியமையாதது. நீங்கள் வேலைதேடும்பொழுதும், மேலும் வேலையில் பதவியுயர்வைப் பெற்றுக்கொள்வதற்கும், நல்ல வேலைமாற்றம் பெற்றுக்கொள்வதற்கும், சமயத்தில் இரண்டாவது வேலை பெற்றுக்கொள்வதற்கும் தகைமைத் திரட்டு (Resume)உதவுகின்றது. உங்களில் பலரும் இதனை எழுத்து வடிவம் (Text) மூலம் உருவாக்கி வைத்திருப்பீர்கள். இங்கு நீங்கள் காணப்போவது தகவற்சித்திர (Infographics) வடிவத்தினாலான ஒரு தகைமைத் திரட்டு (Resume).இதனை உருவாக்கியவர் தன்னுடைய திறமைகளை, அழகாக தன் அவயவங்கள் ஒவ்வொன்றுக்கும் உள்ள திறமைகளாக நிரல் படுத்தியுள்ளார். இனி தகவற்சித்திரத்தைப் பார்ப்போம்.
இத்தகவற்சித்திரம் மிகவும் பெரியது. எனவே தகவற்சித்திரத்தில் க்ளிக்கி (click) ஓப்பன் (open) பண்ணிப் பார்க்கவும்.
இதனைப் பார்க்கும் உங்களிற்கும் இதுபோன்ற தகவற்சித்திர (Infographics) வடிவத்தினாலான ஒரு தகைமைத் திரட்டு (Resume) ஒன்றை உருவாக்கும் எண்ணம் தோன்றலாம். பின்வரும் இணைப்புக்களில் சென்று முயற்சிக்கவும்.
This infographics article have information about how can create a resume in inforgraphics form. Also you can see a sample Infographics resume and you can see some links for Infographics tool.
Source: www.careymercier.com நன்றி :www.careymercier.com