Tuesday, December 25, 2018

புனித நத்தார் தின வாழ்த்துக்கள்!!

எல்லோருக்கும் புனித நத்தார் தின வாழ்த்துக்கள்!!!!




அன்புடன் எல்லோருக்கும் எனது உளம் கனிந்த
புனித நத்தார் தின வாழ்த்துக்கள்.


அன்புடன்
சாதாரணன்

Saturday, March 31, 2018

அனைவருக்கும் உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) தின வாழ்த்துக்கள்

அனைவருக்கும் உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) தின வாழ்த்துக்கள்

அனைவருக்கும் உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) தின வாழ்த்துக்கள் www.saatharanan.com-036
அனைவருக்கும் உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) தின வாழ்த்துக்கள்


அன்புடன்
சாதாரணன்

Friday, February 2, 2018

அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா'

அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி அவர்களின் 20 வது நினைவு தினம்




இன்று அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி அவர்களின் 20வது நினைவு தினமாகும். சின்னக்காவின் அன்பு, சிக்கனம், ஓர்மம், உச்சமாக சின்னக்காவின் பழஞ்சோற்றுக் குழையலின் ருசி என நினைவிற் கொண்டு, 
உலகெங்கும் பரந்து வாழும் சின்னக்காவின் உறவுகள் அனைவர் சார்பாகவும்  நினைவு கூருகின்றோம். வரும் நாட்களில் எழுத்துக்களில் மேலும் பகிர்வோம்.


அன்புடன்
சாதாரணன்.

Thursday, January 25, 2018

ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!

ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!


இன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2018) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
 Short Short News : Australia Day

இந்த வருடம் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை, New South Wales (NSW) மாநிலத்தை சேர்ந்தவரும், உலகின் உயர்மட்ட அறிவியலாளர்களில் ஒருவரும், குவாண்டம் கணணியின் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும் ஈடிலா ஆராய்ச்சிகளில் சிறந்த பணியாற்றிவரும், முன்னோடியான‌ Professor Michelle Yvonne Simmons அவர்கள் பெற்றுக்கொள்கின்றார். இந்த விருது ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தலைமைத்துவமிக்க கௌரவமான குடிமகனொருவருக்கு ஆஸ்திரேலிய தினத்தையொட்டி வருடம் தோறும் வழங்கப்படும் ஆஸ்திரேலியாவின் அதியுயர்வான‌ விருதாகும்.
Prime Minister Malcolm Turnbull and Australian of the Year Professor Michelle Yvonne Simmons

தெளிவான பளிங்கு நீலக்கடலால் சூழப்பட்ட, அழகான கடற்கரைகளும், தொன்மையான புராதனமிக்க பாறைகளும், மழைவனக்காடுகளும் நிறையப்பெற்ற இயற்கைவளமிக்க ஆஸ்திரேலிய நாட்டின் குடிமகனான நானும் ஆஸ்திரேலிய தினத்தை இன்று விமரிசையாகக் கொண்டாடுகின்றேன்.

எல்லோருக்கும் எனது அன்பு நிறைந்த ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!.

அன்புடன்
சாதாரணன்

இப்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் இணைப்புக்களில் ஆங்கிலத்தில் காணலாம்.

ஆஸ்திரேலியா தினவிபரங்கள்
http://www.australiaday.org.au/

ஆஸ்திரேலியா தின விருதுகள் பற்றிய விபரங்கள்
http://www.australianoftheyear.org.au/

இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் விருதைப் பெறும் Professor Michelle Yvonne Simmons அவர்களின் விபரங்கள்
https://www.australianoftheyear.org.au/honour-roll/?view=fullView&recipientID=1956
https://en.wikipedia.org/wiki/Michelle_Simmons
http://www.cqc2t.org/biography/98

இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் விருதைப் பெறும் Professor Michelle Yvonne Simmons அவர்களின் ஆராய்ச்சி தொடர்பான‌ ஆய்வுக் கட்டுரைகள்
http://www.cqc2t.org/biography/publications?uid=98