Friday, January 25, 2019

ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!

ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!

இன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2019) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

 Short Short News : Australia Day

இந்த வருடம் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை, தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தைச் சேர்ந்தவரான‌ Dr Richard Harris OAM அவர்களும்,  மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தைச் சேர்ந்தவரான‌ Dr Craig Challen SC OAM அவர்களும் இணைந்து பெற்றுக் கொள்கின்றனர்.


Prime Minister Scott Morrison and Australian of the year Dr Richard Harris OAM and Dr Craig Challen SC OAM


மிகச் சிறந்த முக்குளிப்பு வீரர்களான‌ இவர்கள் இருவரும் கடந்த வருடம் (2018) யூலையில் தாய்லாந்தில் 12 சிறுவர்கள் கொண்ட உதைபந்தாட்டக் குழுவொன்று அவர்களது பயிற்றுவிப்பாளரோடு  சுமார் 10 கி.மீ. நீளமுள்ள, சிக்கலான குகை அமைப்பு ஒன்றுக்கு சாகசப் பயணம் மேற்கொண்டபோது, குகையினுள் ஏற்பட்ட திடீர் மழைவெள்ளத்தால் குகையிலிருந்து வெளிவரமுடியாமல் சிக்கிக் கொண்ட பொழுது, அவர்களை மீட்டெடுத்த சர்வதேச குழுவில் இணைந்து ஆற்றிய தீரமிக்க வீரப் பணிக்காக இந்த விருதைப் பெற்றுக் கொள்கின்றனர்.

இந்த விருது ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தலைமைத்துவமிக்க கௌரவமான குடிமமக்களிற்கு ஆஸ்திரேலிய தினத்தையொட்டி வருடம் தோறும் வழங்கப்படும் ஆஸ்திரேலியாவின் அதியுயர்வான‌ விருதாகும்.


தெளிவான பளிங்கு நீலக்கடலால் சூழப்பட்ட, அழகான கடற்கரைகளும், தொன்மையான புராதனமிக்க பாறைகளும், மழைவனக்காடுகளும் நிறையப்பெற்ற இயற்கைவளமிக்க ஆஸ்திரேலிய நாட்டின் குடிமகனான நானும் ஆஸ்திரேலிய தினத்தை இன்று விமரிசையாகக் கொண்டாடுகின்றேன்.

எல்லோருக்கும் எனது அன்பு நிறைந்த ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!.

அன்புடன்
சாதாரணன்

இப்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் இணைப்புக்களில் ஆங்கிலத்தில் காணலாம்.

ஆஸ்திரேலியா தினவிபரங்கள்

ஆஸ்திரேலியா தின விருதுகள் பற்றிய விபரங்கள்

இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் விருதைப் பெறும் Dr Richard Harris OAM அவர்களின் விபரங்கள்


இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் விருதைப் பெறும்  Dr Craig Challen SC OAM அவர்களின் விபரங்கள்Thursday, January 10, 2019

வெட்டிவேளைகளில் - ஒரு ஜனரஞ்சகப் பதிவு(கள்) - அறிமுகம்

வெட்டிவேளைகளில் - ஒரு ஜனரஞ்சகப் பதிவு(கள்) -  அறிமுகம்

வெட்டிவேளைகளில் - ஒரு ஜனரஞ்சகப் பதிவு
வெட்டிவேளைகளில் - ஒரு ஜனரஞ்சகப் பதிவு

ஊரிலிலும், சேலம், சென்னையிலும்,  இங்கு ஆஸ்திரேலியாவில் இருந்த‌, இருக்கும் நாட்களில் படிக்கும், ஊழியம் செய்யும் நேரங்கள் தவிர்த்து நான் அதிகமாக வாழ்வில் களித்துக் கழித்த இடங்கள் என்றால் வாசிகசாலைகளும், தியேட்டர்களும் தான். அந்தளவிற்கு பத்திரிகைகள், சஞ்சிகைள், கதைப் புத்தகங்கள் வாசித்தலும், சினிமா பார்ததலும் என ஆரம்பித்து அன்றிலிருந்து, தற்போது இணையத்தின் வழியாக‌ இன்றுவரை என்னை முழுமையாக ஊடகங்கள் ஆட்கொண்டு விட்டன என்றுதான் சொல்லவேண்டும்.  இன்னும் சொல்லப்போனால் ஊடகங்களில் செயலாற்ற வேண்டும் என்பது நனவாகவும், கனவாகவும் கடந்த, நிகழ், எதிர் காலங்களில் இருந்து வந்தது, வருகின்றது, வரும்!

இன்றைய தகவற்காலத்தில் (Information Age) இணையம் வழியாக‌, சமூக ஊடகங்கள் வந்துவிட்ட பின்னர் யாருக்குமே ஊடகங்கள் சாத்தியமான வெளியாகிவிட்டதென்பதை இன்றைய சமூகவாழ்வில் நாம் கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கின்றோம். தவிர எல்லோருடைய வாழ்வுமே சமூக ஊடகங்களுடன் பின்னிப் பிணைந்துவிட்டதென்றே கூறவேண்டும்.  ஆயினும் பொதுவாக பரபரப்புக்கு உட்பட்டு யாரும் சாதாரணமாக ஊடகங்களில் கண்டுகொள்ளும் விடயங்களுக்கு அப்பாற்பட்டு நேர்மறையாகப் புலப்படும் விடயங்களை அவதானிப்பதிலும் தேடுவதிலுமே, இன்றைய நாட்களில் என் வெட்டிவேளைகள் கழிகின்றன‌. சுருக்கமாகச் சொன்னால் என் வெட்டிவேளைகள் எவ்வாறு கழிந்தன‌, கழிகின்றன என்பதை மிகவும் சுருக்கமாகப் பகிர்வதே வெட்டிவேளைகளில்!.

இன்னொருவிதமாகச் சொன்னால் நான் பத்தியெழுத்து மூலமாக ஒரு இடைவெளிக்குப் பின் மீண்டும் வெட்டிவேளைகளில் என் எழுத்துக்களால் உங்களைச் சந்திக்க விழைகின்றேன்.

இதுவரை, என்னதான் பெரிதாக நான் அலட்டிக் கொண்டாலும், வெட்டிவேளைக‌ளில்:  சிறுகச் சிறுக உங்களிடம் என்னை, என் சந்தோசங்களை, என் ஆர்வங்களை வெளிப்படுத்தும் ஒரு சிறிய‌ முயற்சியேயாகும். கைகூடுமா? பொறுத்திருந்து பார்ப்போமே!!

அன்புடன்
சாதாரணன்

Tuesday, January 1, 2019

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


அன்புடன் எல்லோருக்கும் எனது உளம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

               இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


 
அன்புடன்
சாதாரணன்