Saturday, December 30, 2017

அளவெட்டி அமரர். செல்லையா குமாரசாமி அவர்கள் (முன்னாள் பாராளுமன்ற நேரடிஉரைபெயர்ப்பாளர்) இன்று (30/12/2017) காலமானார்.

அமரர். செல்லையா குமாரசாமி அவர்கள்

அமரர். செல்லையா குமாரசாமி அவர்கள், மனிதன் சந்திரனில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்த, அப்பலோ 11 நிலவுப் பயணத்தை, இலங்கை வானொலி நேரடி வர்ணனையாக ஒலிபரப்பியபோது நேரடி ஒலிபரப்பாளராக செயற்பட்ட பெருமை இவரைச் சாரும். மற்றும் இலங்கை அரசுக்கும், தமிழ் கட்சிகள் இடையில் பூட்டானில் நிகழ்ந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது மொழிபெயர்பாளராகவும் செயற்பட்டவர். இதனால் ஊர்மக்களால் ‘அப்பலோ’ என்றும், பூட்டான் என்றும் செல்லமாக அழைக்கப்படுபவர்.

குமாரசாமி அத்தான், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, வட்டுகோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, ஆகியவற்றின் பழைய மாணவராவார். கல்லூரிக் காலத்தில் தீவிர கடவுள் மறுப்புக் கொள்கையாளராக இருந்து பின்னர் ஆன்மிகத்தில் பற்றுக் கொண்டவராக இருந்தார். அத்தானின் வீடு பழைய 'THE HINDU' பேப்பர் கட்டுகளால் நிறைந்திருக்கும். மொத்தத்தில் அவர் ஒரு பல்துறை சார்ந்த அறிவாளியாகத் திகழ்ந்தார்.

குமாரசாமி அத்தான், ஒரு காலத்தில் தீவிர மார்க்சீயவாதியாக இருந்து பின்னர் தடித்த தமிழரசுக் கட்சி ஆதரவாளராக மாறியவர். இன்னும் சொல்லப்போனால் அமரர் வ. பொன்னம்பலம் (வி.பி) அவர்களுக்கு கம்யூனிஸம் சொல்லிக் கொடுத்தவர் (அவர் வாயால் கூறியது) ; அமரர் தந்தை S.J.V. செல்வநாயகம் அவர்களின் பிரத்தியேக செயலாளராக பணிபுரிந்தவர். பிரச்சனைகளின் மத்தியில் நடந்த இவரது காதல் கல்யாணத்திற்கு, மாவிட்டபுரம் முருகன் கோயிலில் தந்தை செல்வா அவர்கள் முதன்மை விருந்தினராக வந்து தனக்காக காத்திருந்து சிறப்பாக நடாத்தி வைத்ததை என்றுமே பெருமையாகக் கூறிக் கொள்வார்.
குமாரசாமி அத்தானும், சிந்தாமணி அக்காவும்
அமரர், சிந்தாமணி அக்காவைக் காதல் திருமணம் புரிந்ததால், இவருடன் மிகவும் நெருங்கிப் பழகும் பெரும் பாக்கியம் எனக்கு வாய்ப்பாக‌க் கிடைத்தது. அக்கா, அத்தான், இருவரினதும் புரிதலையும், நெருங்கிய ஒற்றுமையையும் அருகில் கண்டு மிகவும் அதிசயித்துமிருக்கின்றேன். இருவரும் ஒரே ஆண்டில் காலமானது, மனதுக்கு சற்று ஆறுதலைத் தருகின்றது. இருவரினதும் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

அன்புடன்
சாதாரணன்

Sunday, December 24, 2017

புனித நத்தார் தின வாழ்த்துக்கள்!!

எல்லோருக்கும் புனித நத்தார் தின வாழ்த்துக்கள்!!!!


Australian Christmas Greetings


 
அன்புடன் எல்லோருக்கும் எனது உளம் கனிந்த

புனித நத்தார் தின வாழ்த்துக்கள்.

அன்புடன்
சாதாரணன்

Monday, May 1, 2017

வெண்திரைக்கூடம் என்ற முகநூல் குழு

அறிமுகம் : வெண்திரைக்கூடம் என்ற முகநூல் குழு


சினிமாதான் இன்றைய உலகின் பலம் வாய்ந்த ஊடகம் என்பதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். அதன் தீவிர இரசிகனாக சிறுவயது முதலே இருக்கின்ற‌ நான், என் நண்பர்களையும் இணைத்துத் தரமான, ஆனால் இலாபம் தரும் சினிமாக்களை, குறும்படங்கள், முழுநீளத் திரைப்படங்கள் உள்ளிட்டு உருவாக்கினால் என்ன என்று நினைத்து வெண்திரைக்கூடம் என்ற முகநூல் குழுவை (Facebook Group) உருவாக்கியிருக்கின்றேன். ஆயினும் முதற்கட்டமாக உங்கள் ஆர்வத்தை அறிந்து செயற்திட்டங்களை உருவாக்கலாம் என்றிருக்கின்றேன்.

இதற்கு சினிமா உருவாக்கி, வெளியிட்டு, வெற்றிகரமாக வியாபாரம் செய்வது வரையிலான நான் அறிந்த, அறியப்போகும் விபரங்களைப் பகிரும்போது எம்மிடையே அதற்கான புரிந்துகொள்ளல் உருவாகி, மிகுந்த செயற்பாட்டுடன் இயங்கக் கூடியதொரு பலமான குழுவொன்றை கட்டலாம் என்று திடமாக நம்புகின்றேன். இதற்கான காலகட்டமாக, குழு உருவாக்குவதற்கான காலமாக ஒரு வருடத்தை தீர்மானித்துள்ளேன். ஆர்வமே முதற் தகமை என்பதால் ஆர்வமிருப்பவர்கள் எந்தவிதத் தயக்கமுமின்றி உங்கள் எண்ணங்களை எம்மிடையே பகிர்ந்து கொள்ளுங்கள். இதற்கு பக்கபலமாக இயங்கக்கூடிய வகையில் வெண்திரை எனும் முகநூல் பக்கத்தையும் (Facebook Page) உருவாக்கியுள்ளேன்.

அவற்றின் இணைப்புக்கள்

Facebook Group : வெண் திரைக்கூடம்

Facebook Page : வெண்திரை

அன்புடன்

சாதாரணன்

Saturday, April 15, 2017

அனைவருக்கும் உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) தின வாழ்த்துக்கள்

அனைவருக்கும் உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) தின வாழ்த்துக்கள்


[caption id="attachment_524" align="aligncenter" width="640"]உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) தின வாழ்த்துக்கள் www.saatharanan.com-036 உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) தின வாழ்த்துக்கள்[/caption]



அன்புடன்
சாதாரணன்

Thursday, April 13, 2017

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் !!!

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!!!


அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் !!!

[caption id="attachment_791" align="aligncenter" width="400"] இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்[/caption]

உங்கள் எல்லோரின் வாழ்வும் சிறப்புற அமைய என் அன்பான இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
சாதாரணன்

Wednesday, January 25, 2017

ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!

ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!


இன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2017) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
 Short Short News : Australia Day

இந்த வருடம் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை, குயின்ஸ்லாந்து (Queensland) மாநிலத்தைச் சேர்ந்த உயிரியல் மருத்துவ விஞ்ஞானி Emeritus Professor Alan Mackay-Sim அவர்கள் பெற்றுக்கொள்கின்றார்.

[caption id="attachment_784" align="aligncenter" width="704"] Prime Minister Malcolm Turnbull and Australian of the Year Emeritus Professor Alan Mackay-Sim[/caption]

மூலக்கூற்று உயிரியல் விஞ்ஞானியான Emeritus Professor Alan Mackay-Sim அவர்கள் நரம்பு மண்டல மீளுருவாக்கம் மற்றும் திருத்தம் (regeneration and repair of the nervous system) தொடர்பான ஆய்வுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக இவர் தலமையில் மேற்கொண்டதொரு மருத்துவ பரிசோதனை (clinical trial) முள்ளந்தண்டில் ஏற்பட்ட காயத்தினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் போனவரின் நாசித் துளையிலிருந்து எடுக்கப்பட்ட உயிரியல் கலங்களை பரிசோதனைச்சாலையில் திருத்தி, மீளுருவாக்கி மீண்டும் பாதிக்கப்பட்டவரின் முள்ளந்தண்டில் உட்புகுத்தி அவர்களை நடக்க வைத்து வெற்றிகாண உதவியது. இப்பரிசோதனையை பிரித்தானிய நரம்பியல் விஞ்ஞானி (Professor of neural regeneration) Geoffrey Raisman அவர்கள் 'மனிதன் சந்திரனில் நடந்ததிற்கு மேலான சாதனை' என்று அச்சமயத்தில் கூறினார்.

தெளிவான பளிங்கு நீலக்கடலால் சூழப்பட்ட, அழகான கடற்கரைகளும், தொன்மையான புராதனமிக்க பாறைகளும், மழைவனக்காடுகளும் நிறையப்பெற்ற இயற்கைவளமிக்க ஆஸ்திரேலிய நாட்டின் குடிமகனான நானும் ஆஸ்திரேலிய தினத்தை இன்று விமரிசையாகக் கொண்டாடுகின்றேன்.

எல்லோருக்கும் எனது அன்பு நிறைந்த ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!.

அன்புடன்
சாதாரணன்

இப்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் இணைப்புக்களில் ஆங்கிலத்தில் காணலாம்.

ஆஸ்திரேலியா தினவிபரங்கள்
http://www.australiaday.org.au/

ஆஸ்திரேலியா தின விருதுகள் பற்றிய விபரங்கள்
http://www.australianoftheyear.org.au/

இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் விருதைப் பெறும்

உயிரியல் மருத்துவ விஞ்ஞானி Emeritus Professor Alan Mackay-Sim  அவர்களின் விபரங்கள்

http://www.australianoftheyear.org.au/honour-roll/?view=fullView&recipientID=1856

https://www.griffith.edu.au/professional-page/professor-alan-mackay-sim