இந்த வாரம் பிரான்ஸ் யாழ் மீடியாவின் குறும்படம் "நகல்".
சாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம் பிரான்ஸ் யாழ் மீடியாவின் "நகல்" குறும்படத்தை நீங்கள் காணலாம்.
[caption id="attachment_725" align="aligncenter" width="560"] சாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம் பிரான்ஸ் யாழ் மீடியாவின் "நகல்" குறும்படம்.[/caption]
குறும்படம் "நகல்" புலத்திலிருந்து இனிமேல் வரவிருக்கும் தமிழ்ப்படங்கள் உலகத் தரத்தையும் விஞ்சியிருக்கும் என்பதற்கு சான்றுபகரும் மற்றுமொரு படமாகும். ஏற்கனவே இக்குறும்படத்தைப் பற்றிய விமர்சனத்துடன் உங்களுடன் இங்கே பகிர்ந்திருக்கின்றேன். மீண்டும் இக்குறும்படத்தின் தரம் கருதி சாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம் திரையிடுகின்றேன்.
இந்த வாரம் இரு குறும்படங்களை சாதாரணனின் வெண்திரையில் நீங்கள் காணலாம். இருபடங்களுமே நகைச்சுவைப் படங்கள்.
சாதாரணனின் வெண்திரையில் இந்தவாரம் இரு நகைச்சுவைக் குறும்படங்கள்
முதலாவதாக ஒரு ஆங்கில செய்திக் குறும்படம். தாய்ப்பாசத்தை எளிமையாகவும் நகைச்சுவையாகவும் மிகவும் குறைந்த நேரத்தில் விளக்கவும் என்றால் அது மழலையால் மட்டுமே முடியும் என்பதைக் காட்டுகின்றது. எடுத்துக்கொண்ட நேரம் 20 செக்கன் மட்டுமே!! அடுத்து இரண்டாவதாக ஒரு மலையாள நகைச்சுவைக் குறும்படம். மலையாளப் படம் பார்க்கேக்கே என்னடா இன்னும் பகிடி யைக் காணேல்லை , இதைத்தான் பகிடி எண்டு சொன்னவனோ எண்டு குறை விளங்கப்படாது. சும்மா பகிடிக்கு சொன்னனான். படம் நெடுகிலும் (22 நிமிடங்கள்) புன்னகையை வரவழைக்கும் மிகவும் யதார்த்தமான நகைச்சுவை நிறைந்திருக்கின்றது. ஆனால், உச்சக்கட்டப் (Climax) பகிடியும் இருக்குது. படத்துக்கு மொழியாக்கம் (subtitle) உண்டு. மலையாளம் விளங்கிறவை அதை off பண்ணியிட்டுப் பாருங்கோ; அப்பத்தான் நல்லாயிருக்கும். வேறையென்ன இனிப் படங்களைப் பாருங்கோவன்!
கனடிய தமிழ் சினிமா இயக்குநர் லெனின் எம் சிவம் அவர்களின் இயக்கத்தில் உருவான 'உறுதி' குறும்திரைப்படம்
கனடிய தமிழ் சினிமா இயக்குநர் லெனின் எம் சிவம் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்து ஷங்காய் திரைப்பட விழா உட்பட பல சர்வதேச விருதுகளை வென்று ஈழத்தமிழருக்கு பெருமை சேர்த்த திரைப்படம் 'A Gun and a Ring'. இந்தத் திரைப்படம் ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, இந்தியா, கொழும்பு உட்பட பல நாடுகளிலும் திரையிடப்பட்டது. இறுதியாக தற்போது யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக நடந்த சர்வதேச திரைப்பட விழாவிலும் 'A Gun and a Ring' திரையிடப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.
[caption id="attachment_702" align="aligncenter" width="560"] இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் கனடிய தமிழ் சினிமா இயக்குநர் லெனின் எம் சிவம் அவர்களின் 'உறுதி' குறும்திரைப்படம்[/caption]
இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் கனடிய தமிழ் சினிமா இயக்குநர் லெனின் எம் சிவம் அவர்களின் இயக்கத்தில் உருவான 'உறுதி' எனும் குறும்திரைப்படம்தான் திரையிடப்படுகிறது.
இனி படத்தைப் பற்றிச் சொல்வதானால் இயல்பான வசனங்கள், எளிமையான திரைக்கதை, ஒளிப்பதிவு, மற்றும் நடிப்பு என்பன படத்தின் பலம் எனலாம். பலருக்கும் படத்தின் பலவீனமாக தெரியும் ஒரு விசயம், எனக்கு படத்தின் பலமாகப் படுவதால் அதை விட்டு விடுவோம்.
மேலும் இக் குறும் திரைப்படம் முக்கியமாக புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மிகவும் பிரச்சனையான ஒரு விசயத்தை தீர்வுடன் உங்கள் முன் பார்வைக்கு வைக்கின்றது. அதைவிட இயக்குநரிடம் திறமை இருக்கின்றது என்பதை 'உறுதி' உறுதியாக கட்டியம் கூறிவிட்டது.
இன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2015) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்த வருடம் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை, Victoria (VIC) மாநிலத்தை சேர்ந்தவரும், குடும்ப வன்முறைக்கு (Domestic Violence) எதிராக உத்வேகமாக செயற்படுபவருமான குடும்ப வன்முறை விழிப்புணர்வு ஆர்வலர் (Domestic violence campaigner), Rosie Batty அவர்கள் பெற்றுக்கொள்கின்றார். இந்த விருது ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தலைமைத்துவமிக்க கௌரவமான குடிமகனொருவருக்கு ஆஸ்திரேலிய தினத்தையொட்டி வருடம் தோறும் வழங்கப்படும் ஆஸ்திரேலியாவின் அதியுயர்வான விருதாகும்.
[caption id="attachment_753" align="aligncenter" width="620"] Australian of the year 2015, Rosie Batty[/caption]
தெளிவான பளிங்கு நீலக்கடலால் சூழப்பட்ட, அழகான கடற்கரைகளும், தொன்மையான புராதனமிக்க பாறைகளும், மழைவனக்காடுகளும் நிறையப்பெற்ற இயற்கைவளமிக்க ஆஸ்திரேலிய நாட்டின் குடிமகனான நானும் ஆஸ்திரேலிய தினத்தை இன்று விமரிசையாகக் கொண்டாடுகின்றேன்.
எல்லோருக்கும் எனது அன்பு நிறைந்த ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!.
அன்புடன் சாதாரணன்
இப்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் இணைப்புக்களில் ஆங்கிலத்தில் காணலாம்.