Showing posts with label Venthirai. Show all posts
Showing posts with label Venthirai. Show all posts

Thursday, October 8, 2015

சாதாரணனின் வெண்திரையில் இந்தவாரம் குறும்படம் "நகல்"

இந்த வாரம் பிரான்ஸ் யாழ் மீடியாவின் குறும்படம் "நகல்".


சாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம் பிரான்ஸ் யாழ் மீடியாவின் "நகல்" குறும்படத்தை நீங்கள் காணலாம்.

[caption id="attachment_725" align="aligncenter" width="560"]சாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம் பிரான்ஸ் யாழ் மீடியாவின் "நகல்" குறும்படம். SaatharananVenthirai003                                        சாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம்              பிரான்ஸ் யாழ் மீடியாவின் "நகல்" குறும்படம்.[/caption]

குறும்படம் "நகல்" புலத்திலிருந்து இனிமேல் வரவிருக்கும் தமிழ்ப்படங்கள் உலகத் தரத்தையும் விஞ்சியிருக்கும் என்பதற்கு சான்றுபகரும் மற்றுமொரு படமாகும். ஏற்கனவே இக்குறும்படத்தைப் பற்றிய விமர்சனத்துடன் உங்களுடன் இங்கே பகிர்ந்திருக்கின்றேன். மீண்டும் இக்குறும்படத்தின் தரம் கருதி சாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம் திரையிடுகின்றேன்.

இக்குறும் படம் பற்றிய என் முழுவிமர்சனத்தைப் பின்வரும் இணைப்பில் காணலாம்.

http://www.saatharanan.com/eelam-tamil-shortfilm/

இனிப் படத்தைப் பாருங்கோவன்.

அன்புடன்
சாதாரணன்.

நன்றி : YouTube, Yaal Media

Thursday, October 1, 2015

சாதாரணனின் வெண்திரையில் இந்தவாரம் இரு நகைச்சுவைக் குறும்படங்கள்

சாதாரணனின் வெண்திரையில் இந்தவாரம்


இந்த வாரம் இரு குறும்படங்களை சாதாரணனின் வெண்திரையில் நீங்கள் காணலாம். இருபடங்களுமே நகைச்சுவைப் படங்கள்.

சாதாரணனின் வெண்திரையில் இந்தவாரம் இரு நகைச்சுவைக் குறும்படங்கள் SaatharananVenthirai002
சாதாரணனின் வெண்திரையில் இந்தவாரம் இரு நகைச்சுவைக் குறும்படங்கள்
முதலாவதாக ஒரு ஆங்கில செய்திக் குறும்படம்.
தாய்ப்பாசத்தை எளிமையாகவும் நகைச்சுவையாகவும் மிகவும் குறைந்த நேரத்தில் விளக்கவும் என்றால் அது மழலையால் மட்டுமே முடியும் என்பதைக் காட்டுகின்றது. எடுத்துக்கொண்ட நேரம் 20 செக்கன் மட்டுமே!!
அடுத்து இரண்டாவதாக ஒரு மலையாள நகைச்சுவைக் குறும்படம்.
மலையாளப் படம் பார்க்கேக்கே என்னடா இன்னும் பகிடி யைக் காணேல்லை , இதைத்தான் பகிடி எண்டு சொன்னவனோ எண்டு குறை விளங்கப்படாது. சும்மா பகிடிக்கு சொன்னனான். படம் நெடுகிலும் (22 நிமிடங்கள்) புன்னகையை வரவழைக்கும் மிகவும் யதார்த்தமான நகைச்சுவை நிறைந்திருக்கின்றது. ஆனால், உச்சக்கட்டப் (Climax) பகிடியும் இருக்குது. படத்துக்கு மொழியாக்கம் (subtitle) உண்டு. மலையாளம் விளங்கிறவை அதை off பண்ணியிட்டுப் பாருங்கோ; அப்பத்தான் நல்லாயிருக்கும்.
வேறையென்ன இனிப் படங்களைப் பாருங்கோவன்!


அன்புடன்
சாதாரணன்.

நன்றி : Cordoba , Kaali Kuppy Media and YouTube

Wednesday, September 23, 2015

சாதாரணனின் வெண்திரையில் இந்தவாரம் 'உறுதி' குறும்திரைப்படம்

கனடிய தமிழ் சினிமா இயக்குநர் லெனின் எம் சிவம் அவர்களின் இயக்கத்தில் உருவான 'உறுதி' குறும்திரைப்படம்


கனடிய தமிழ் சினிமா இயக்குநர் லெனின் எம் சிவம் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்து ஷங்காய் திரைப்பட விழா உட்பட பல சர்வதேச விருதுகளை வென்று ஈழத்தமிழருக்கு பெருமை சேர்த்த திரைப்படம் 'A Gun and a Ring'. இந்தத் திரைப்படம்
ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, இந்தியா, கொழும்பு உட்பட பல நாடுகளிலும் திரையிடப்பட்டது. இறுதியாக‌ தற்போது யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக நடந்த‌ சர்வதேச திரைப்பட விழாவிலும் 'A Gun and a Ring' திரையிடப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.

[caption id="attachment_702" align="aligncenter" width="560"]இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் கனடிய தமிழ் சினிமா இயக்குநர் லெனின் எம் சிவம் அவர்களின் 'உறுதி' குறும்திரைப்படம் SaatharananVenthirai001 இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் கனடிய தமிழ் சினிமா இயக்குநர் லெனின் எம் சிவம் அவர்களின் 'உறுதி' குறும்திரைப்படம்[/caption]

இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் கனடிய தமிழ் சினிமா இயக்குநர் லெனின் எம் சிவம் அவர்களின் இயக்கத்தில் உருவான 'உறுதி' எனும் குறும்திரைப்படம்தான் திரையிடப்படுகிறது.

இனி படத்தைப் பற்றிச் சொல்வதானால் இயல்பான வசனங்கள், எளிமையான திரைக்கதை, ஒளிப்பதிவு, மற்றும் நடிப்பு என்பன படத்தின் பலம் எனலாம். பலருக்கும் படத்தின் பலவீனமாக தெரியும் ஒரு விச‌யம், எனக்கு படத்தின் பலமாகப் படுவதால் அதை விட்டு விடுவோம்.

மேலும் இக் குறும் திரைப்படம் முக்கியமாக புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மிகவும் பிரச்சனையான ஒரு விச‌யத்தை தீர்வுடன் உங்கள் முன் பார்வைக்கு வைக்கின்றது. அதைவிட இயக்குநரிடம் திறமை இருக்கின்றது என்பதை 'உறுதி' உறுதியாக கட்டியம் கூறிவிட்டது.

சரி இனி படத்தைப் பாருங்கோ.


அன்புடன்
சாதாரணன்.

நன்றி : தமிழ் சினிமா இயக்குநர் லெனின் எம் சிவம், YouTube