கனடிய தமிழ் சினிமா இயக்குநர் லெனின் எம் சிவம் அவர்களின் இயக்கத்தில் உருவான 'உறுதி' குறும்திரைப்படம்
கனடிய தமிழ் சினிமா இயக்குநர் லெனின் எம் சிவம் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்து ஷங்காய் திரைப்பட விழா உட்பட பல சர்வதேச விருதுகளை வென்று ஈழத்தமிழருக்கு பெருமை சேர்த்த திரைப்படம் 'A Gun and a Ring'. இந்தத் திரைப்படம்
ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, இந்தியா, கொழும்பு உட்பட பல நாடுகளிலும் திரையிடப்பட்டது. இறுதியாக தற்போது யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக நடந்த சர்வதேச திரைப்பட விழாவிலும் 'A Gun and a Ring' திரையிடப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.
[caption id="attachment_702" align="aligncenter" width="560"] இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் கனடிய தமிழ் சினிமா இயக்குநர் லெனின் எம் சிவம் அவர்களின் 'உறுதி' குறும்திரைப்படம்[/caption]
இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் கனடிய தமிழ் சினிமா இயக்குநர் லெனின் எம் சிவம் அவர்களின் இயக்கத்தில் உருவான 'உறுதி' எனும் குறும்திரைப்படம்தான் திரையிடப்படுகிறது.
இனி படத்தைப் பற்றிச் சொல்வதானால் இயல்பான வசனங்கள், எளிமையான திரைக்கதை, ஒளிப்பதிவு, மற்றும் நடிப்பு என்பன படத்தின் பலம் எனலாம். பலருக்கும் படத்தின் பலவீனமாக தெரியும் ஒரு விசயம், எனக்கு படத்தின் பலமாகப் படுவதால் அதை விட்டு விடுவோம்.
மேலும் இக் குறும் திரைப்படம் முக்கியமாக புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மிகவும் பிரச்சனையான ஒரு விசயத்தை தீர்வுடன் உங்கள் முன் பார்வைக்கு வைக்கின்றது. அதைவிட இயக்குநரிடம் திறமை இருக்கின்றது என்பதை 'உறுதி' உறுதியாக கட்டியம் கூறிவிட்டது.
சரி இனி படத்தைப் பாருங்கோ.
அன்புடன்
சாதாரணன்.
நன்றி : தமிழ் சினிமா இயக்குநர் லெனின் எம் சிவம், YouTube
மிகவும் நன்றி.
ReplyDeleteநன்றாக உள்ளது
ReplyDelete