சாதாரணனின் வெண்திரையில் இந்தவாரம்
இந்த வாரம் இரு குறும்படங்களை சாதாரணனின் வெண்திரையில் நீங்கள் காணலாம். இருபடங்களுமே நகைச்சுவைப் படங்கள்.
முதலாவதாக ஒரு ஆங்கில செய்திக் குறும்படம்.
தாய்ப்பாசத்தை எளிமையாகவும் நகைச்சுவையாகவும் மிகவும் குறைந்த நேரத்தில் விளக்கவும் என்றால் அது மழலையால் மட்டுமே முடியும் என்பதைக் காட்டுகின்றது. எடுத்துக்கொண்ட நேரம் 20 செக்கன் மட்டுமே!!
அடுத்து இரண்டாவதாக ஒரு மலையாள நகைச்சுவைக் குறும்படம்.
மலையாளப் படம் பார்க்கேக்கே என்னடா இன்னும் பகிடி யைக் காணேல்லை , இதைத்தான் பகிடி எண்டு சொன்னவனோ எண்டு குறை விளங்கப்படாது. சும்மா பகிடிக்கு சொன்னனான். படம் நெடுகிலும் (22 நிமிடங்கள்) புன்னகையை வரவழைக்கும் மிகவும் யதார்த்தமான நகைச்சுவை நிறைந்திருக்கின்றது. ஆனால், உச்சக்கட்டப் (Climax) பகிடியும் இருக்குது. படத்துக்கு மொழியாக்கம் (subtitle) உண்டு. மலையாளம் விளங்கிறவை அதை off பண்ணியிட்டுப் பாருங்கோ; அப்பத்தான் நல்லாயிருக்கும்.
வேறையென்ன இனிப் படங்களைப் பாருங்கோவன்!
அன்புடன்
சாதாரணன்.
நன்றி : Cordoba , Kaali Kuppy Media and YouTube
Good
ReplyDelete