Tuesday, January 26, 2016

ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!

ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!


இன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2016) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
 Short Short News : Australia Day

இந்த வருடம் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை, ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசத்தை  Australian Capital Territory (ACT)  சேர்ந்த, முன்னாள் ஆஸ்திரேலிய இராணுவத் தளபதி David Morrison அவர்கள் பெற்றுக்கொள்கின்றார்.

[caption id="attachment_771" align="aligncenter" width="650"]Australian of the year 2016, David Morrison www.saatharanan.com-053 Australian of the year 2016, David Morrison[/caption]

David Morrison அவர்கள் உத்வேகமாக இயங்கும் பாலின சமத்துவச் செயற்பாட்டாளர் என்ற வகையில் இவ்விருது வழங்கப்பட்டிருக்கின்றது. David Morrison அவர்கள் இராணுவத்தின் தளபதியாக செயற்பட்டபொழுது பாலின அத்துமீறல்களுக்கு எதிராக மிக அழுத்தமாக குரல் எழுப்பி ஆஸ்திரேலிய இராணுவத்தில் கலாச்சாரரீதியிலான மாற்றத்தை உண்டுபண்ணியவர்; இதன் காரணமாக சர்வதேசரீதியாக மிகவும் அறியப்பட்டவர்.

தெளிவான பளிங்கு நீலக்கடலால் சூழப்பட்ட, அழகான கடற்கரைகளும், தொன்மையான புராதனமிக்க பாறைகளும், மழைவனக்காடுகளும் நிறையப்பெற்ற இயற்கைவளமிக்க ஆஸ்திரேலிய நாட்டின் குடிமகனான நானும் ஆஸ்திரேலிய தினத்தை இன்று விமரிசையாகக் கொண்டாடுகின்றேன்.

எல்லோருக்கும் எனது அன்பு நிறைந்த ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!.

அன்புடன்
சாதாரணன்

இப்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் இணைப்புக்களில் ஆங்கிலத்தில் காணலாம்.

ஆஸ்திரேலியா தினவிபரங்கள்
http://www.australiaday.org.au/

ஆஸ்திரேலியா தின விருதுகள் பற்றிய விபரங்கள்
http://www.australianoftheyear.org.au/

இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் விருதைப் பெறும்

முன்னாள் ஆஸ்திரேலிய இராணுவத் தளபதி David Morrison அவர்களின் விபரங்கள்

http://www.australianoftheyear.org.au/honour-roll/?view=fullView&recipientID=1348

 

 

 

Monday, January 25, 2016

சாதாரணனின் வெண்திரையில் இந்தவாரம் 'Australia Daze' எனும் ஆவணத் திரைப்படம்

சாதாரணனின் வெண்திரையில் இந்தவாரம்


இன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2016) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

[caption id="attachment_764" align="aligncenter" width="560"]‘Australia Daze’ எனும் ஆவணத் திரைப்படம் SaatharananVenthirai004 ‘Australia Daze’ ஆவணத் திரைப்படம்[/caption]

ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் 'Australia Daze' எனும் ஆவணத் திரைப்படம்தான் திரையிடப்படுகிறது. இத்திரைப்படம் 1988 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியத் தினத்தன்று எடுக்கப்பட்டது, அன்று ஆஸ்திரேலியாவின் பல்வேறு இடங்களிலுமுள்ள பல்வேறு தரப்பட்ட மக்களும் எவ்வாறு ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாடுகிறார்கள் என்பதைச் சித்தரிக்கின்றது.

இத்திரைப்படம் சிறந்த திரைப்படத் தொகுப்புக்காக Australian Film Institute (AFI) Awards Best Editing 1988 விருதைப் பெற்றுக்கொண்ட திரைப்படமாகும்.

சரி இனி படத்தைப் பாருங்கோ.

அன்புடன்
சாதாரணன்

நன்றி : angklung eds, YouTube
நன்றி : Australia Daze, Wikipedia

Thursday, January 14, 2016

தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியும் சின்னக் கவிதையும்!

எல்லோருக்கும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துகள், கூடவே தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். ஒரு சின்னக்கவிதை கொஞ்சம் அவ்வையார், மிச்சம் நான்.

[caption id="attachment_600" align="aligncenter" width="500"]தைப்பொங்கல் வாழ்த்துகள் www.saatharanan.com-044                      தைப்பொங்கல் வாழ்த்துகள்[/caption]

 

வரப்புயர நீருயரும்.
நீர் உயர நெல் உயரும்.
நெல் உயர அறுவடை பெருகும்.
அறுவடை பெருக உழவன் உயர்வான்.
உழவன் உயர்ந்தால் உலகமே செழிக்கும்.

அன்புடன்.
சாதாரணன்.

இணைப்புக்கள்
உங்களுக்கும் குழந்தைகளுக்கும்.

http://en.wikipedia.org/wiki/Thai_Pongal

http://www.pongalfestival.org/pongal-festival.html