Tuesday, February 2, 2021

இன்று சின்னக்காவின் 23வது நினைவு தினம்

அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி அவர்களின் 23வது நினைவு தினம்

        அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி
இன்று அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி அவர்களின் 23வது நினைவு தினமாகும். நாங்கள் அம்பிகை இல்லத்தில் வசித்த நாட்களில் நோயுற்றோருக்கு முன்னுரிமை அளித்து தன்னுடைய விசேட கவனிப்பின் கீழ் கொணர்ந்து எங்கள் உடல், உள்ளம் உணர்வுகளை ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவி செய்வதில் மிகவும் அவதானமாகச் சிறப்பாகச் செயற்படுவார்.  குறிப்பாக யாழ்ப்பாணதில் காலரா பரவிய 1970களின் முற்கூற்றில் அம்பிகை இல்லத்தின் சுற்றாடலை சுகாதாரமாக வைத்திருப்பதில் கவனமாக இருந்ததோடு, எங்களுக்கு வேண்டிய காலராத் தடுப்புச் சிகிச்சைகளை காலக்கிரமத்தில் கிட்டச் செய்வதில் சின்னக்கா எடுத்த விசேட கவனத்தை, இன்று உலகில் நிலவும் சுகாதார நெருக்கடியான காலகட்டத்தில் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. உலகெங்கும் பரந்து வாழும் சின்னக்காவின் உறவுகள் அனைவர் சார்பாகவும் அன்புடன் நினைவு கூருகின்றோம். 


அன்புடன்
சாதாரணன்