வெட்டிவேளைகளில் - ஒரு ஜனரஞ்சகப் பதிவு(கள்) - அறிமுகம்
வெட்டிவேளைகளில் - ஒரு ஜனரஞ்சகப் பதிவு
|
ஊரிலிலும், சேலம், சென்னையிலும், இங்கு ஆஸ்திரேலியாவில் இருந்த, இருக்கும் நாட்களில் படிக்கும், ஊழியம் செய்யும் நேரங்கள் தவிர்த்து நான் அதிகமாக வாழ்வில் களித்துக் கழித்த இடங்கள் என்றால் வாசிகசாலைகளும், தியேட்டர்களும் தான். அந்தளவிற்கு பத்திரிகைகள், சஞ்சிகைள், கதைப் புத்தகங்கள் வாசித்தலும், சினிமா பார்ததலும் என ஆரம்பித்து அன்றிலிருந்து, தற்போது இணையத்தின் வழியாக இன்றுவரை என்னை முழுமையாக ஊடகங்கள் ஆட்கொண்டு விட்டன என்றுதான் சொல்லவேண்டும். இன்னும் சொல்லப்போனால் ஊடகங்களில் செயலாற்ற வேண்டும் என்பது நனவாகவும், கனவாகவும் கடந்த, நிகழ், எதிர் காலங்களில் இருந்து வந்தது, வருகின்றது, வரும்!
இன்றைய தகவற்காலத்தில் (Information Age) இணையம் வழியாக, சமூக ஊடகங்கள் வந்துவிட்ட பின்னர் யாருக்குமே ஊடகங்கள் சாத்தியமான வெளியாகிவிட்டதென்பதை இன்றைய சமூகவாழ்வில் நாம் கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கின்றோம். தவிர எல்லோருடைய வாழ்வுமே சமூக ஊடகங்களுடன் பின்னிப் பிணைந்துவிட்டதென்றே கூறவேண்டும். ஆயினும் பொதுவாக பரபரப்புக்கு உட்பட்டு யாரும் சாதாரணமாக ஊடகங்களில் கண்டுகொள்ளும் விடயங்களுக்கு அப்பாற்பட்டு நேர்மறையாகப் புலப்படும் விடயங்களை அவதானிப்பதிலும் தேடுவதிலுமே, இன்றைய நாட்களில் என் வெட்டிவேளைகள் கழிகின்றன. சுருக்கமாகச் சொன்னால் என் வெட்டிவேளைகள் எவ்வாறு கழிந்தன, கழிகின்றன என்பதை மிகவும் சுருக்கமாகப் பகிர்வதே வெட்டிவேளைகளில்!.
இன்னொருவிதமாகச் சொன்னால் நான் பத்தியெழுத்து மூலமாக ஒரு இடைவெளிக்குப் பின் மீண்டும் வெட்டிவேளைகளில் என் எழுத்துக்களால் உங்களைச் சந்திக்க விழைகின்றேன்.
இதுவரை, என்னதான் பெரிதாக நான் அலட்டிக் கொண்டாலும், வெட்டிவேளைகளில்: சிறுகச் சிறுக உங்களிடம் என்னை, என் சந்தோசங்களை, என் ஆர்வங்களை வெளிப்படுத்தும் ஒரு சிறிய முயற்சியேயாகும். கைகூடுமா? பொறுத்திருந்து பார்ப்போமே!!
அன்புடன்
சாதாரணன்
No comments:
Post a Comment