ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!
இன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2020) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்த வருடம் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை, தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தைச் சேர்ந்தவரும், ஆஸ்திரேலிய, உலக மக்களிடையே டைப் 2 நீரிழிவு நோய் பற்றிய, குறிப்பாக குருட்டுத்தன்மைக்கான அதன் தொடர்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முன்னின்று உழைத்து வருபவருமான , கண் சிகிச்சை நிபுணர் Dr James Muecke AM அவர்கள் பெற்றுக்கொள்கின்றார்.
Prime Minister Scott Morrison and Australian of the Year Dr James Muecke AM |
தெளிவான பளிங்கு நீலக்கடலால் சூழப்பட்ட, அழகான கடற்கரைகளும், தொன்மையான புராதனமிக்க பாறைகளும், மழைவனக்காடுகளும் நிறையப்பெற்ற இயற்கைவளமிக்க ஆஸ்திரேலிய நாட்டின் குடிமகனான நானும் ஆஸ்திரேலிய தினத்தை இன்று விமரிசையாகக் கொண்டாடுகின்றேன்.
எல்லோருக்கும் எனது அன்பு நிறைந்த ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!.
அன்புடன்
சாதாரணன்
இப்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் இணைப்புக்களில் ஆங்கிலத்தில் காணலாம்.
ஆஸ்திரேலியா தினவிபரங்கள்
ஆஸ்திரேலியா தின விருதுகள் பற்றிய விபரங்கள்
இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் விருதைப் பெறும் Dr James Muecke AM
அவர்களின் விபரங்கள்
https://www.australianoftheyear.org.au/honour-roll/?view=fullView&recipientID=2209
அவர்களின் விபரங்கள்
https://www.australianoftheyear.org.au/honour-roll/?view=fullView&recipientID=2209
No comments:
Post a Comment