ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!!
இன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2024) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
Prime Minister Anthony Albanese and Australia of the yearProfessor Georgina Long AO and Professor Richard Scolyer AO |
ஒரு தசாப்தத்திற்கு முன்னர், முற்றிய மெலனோமா குணப்படுத்த முடியாத ஒரு நோயாக இருந்தது - ஆனால் Georgina மற்றும் Richard ஆகியோரின் நோயெதிர்ப்பு சிகிச்சை (Immunotherapy Approach) முறையினால் நோயாளிகளின் சொந்த நோயெதிர்ப்பு மண்டலம் தூண்டப்படுகின்றது, அதனால் மெலனோமாவைக் குணப்படுத்த முடிகின்றது. இன்று மெலனோமா குணப்படுத்தக் கூடியதொரு நோயாகக் கணிக்கப்படுகின்றது.
தெளிவான பளிங்கு நீலக்கடலால் சூழப்பட்ட, அழகான கடற்கரைகளும், தொன்மையான புராதனமிக்க பாறைகளும், மழைவனக்காடுகளும் நிறையப்பெற்ற இயற்கைவளமிக்க ஆஸ்திரேலிய நாட்டின் குடிமகனான நானும் ஆஸ்திரேலிய தினத்தை இன்று விமரிசையாகக் கொண்டாடுகின்றேன்.
எல்லோருக்கும் எனது அன்பு நிறைந்த ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!.
அன்புடன்
சாதாரணன்
இப்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் இணைப்புக்களில் ஆங்கிலத்தில் காணலாம்.
ஆஸ்திரேலியா தினவிபரங்கள்
http://www.australiaday.org.au/
ஆஸ்திரேலியா தின விருதுகள் பற்றிய விபரங்கள்
http://www.australianoftheyear.org.au/
இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் விருதைப் பெறும் அவர்களின் விபரங்கள்
No comments:
Post a Comment