Sunday, January 26, 2025

ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!!

ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!! 

 
இன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2025) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 

Short Short News : Australia Day


இந்த வருடம் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை, நீல் டேனிஹர் ஏஓ (Neale Daniher AO) அவர்கள் பெற்றுக்கொள்கின்றார்.

Neal Dehiher AO with Prime Minister  Anthony Albanese


இந்த விருது ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தலைமைத்துவமிக்க கௌரவமான குடிமகனொருவருக்கு ஆஸ்திரேலிய தினத்தையொட்டி வருடம் தோறும் வழங்கப்படும் ஆஸ்திரேலியாவின் அதியுயர்வான விருதாகும்.

நீல் டேனிஹர் ஏஓ, அவர்கள் மோட்டார்  நியூரான் நோய்க்கு  (Motor Neurone Disease - MND)  ஒரு நிரந்தரமான தீர்வைக் கண்டுபிடிக்க, மருத்துவ ஆராய்ச்சிக்காக  100 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிதியைத்  திரட்டி முதலீடு செய்துள்ள தொண்டு நிறுவனமான FightMND யின் இணை நிறுவனர்  ஆவார்.

2013 ஆண்டில் அவருக்கு இந்நோய் கண்டறியபட்டது, அன்றிலிருந்து  நீலும் அவரது குடும்பத்தினரும் இந்த நோயின் தாக்கத்தின் விளைவுகளை எதிர்கொண்டு போராடி வருகின்றனர், ஆனாலும் கூட நீல்  அவர்கள்  இந்நோய்க்கான  சிகிச்சைக்கான  வழியைக் கண்டறிவதற்காக உழைக்கும் அயராத பிரச்சாரகராக முன்னணியிலி ருந்து செயற்பட்டு வருகிறார். கூடவே  எப்போதும் எம்என்டி (MND) நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே  ஏற்படுத்தியும் வருகின்றார்.

இவர் ஆஸ்திரேலியாவிற்கே உரித்தான தனித்துவமிக்க விளையாட் டான ஆஸ்திரேலியன் காற்பந்து (Australian Football Leaque – AFL) விளையாட்டின் முன்னாள் வீரரும், பயிற்றுனரும் ஆவார். இதன்  காணமாக சமூக மற்றும் பொதுவாழ்விலும்  இருக்கும் பிரபலத்தையும் பயன்படுத்தி  மோட்டார் நியூரான் நோய்க்கு எதிரான  சமூக அக்கறையைத்   திரட்டிய  வண்ணமுள்ளார்.

நீல் தனக்கேற்பட்   நிலையை மிகவும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு வாழ்ந்து வருகின்றார், நோயின் மேம்பட்ட நிலைகளிலும் கூட. வருடாந்திரமாக நடைபெறும்  FightMND    இற்காக நிதி, மற்றும் சமூக  ஆதரைவைத்  திரட்டும் BigFreeze தொடர் நிகழ்வில் அவர் முன்னணியில் நின்று செயற்படுகின்றார்

இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதைப் பெறும் , நீல் டேனிஹர் ஏஓ (Neale Daniher AO) அவர்களை நாமும் வாழ்த்துவோமாக.

தெளிவான பளிங்கு நீலக்கடலால் சூழப்பட்ட, அழகான கடற்கரைகளும், தொன்மையான புராதனமிக்க பாறைகளும், மழைவனக்காடுகளும் நிறையப்பெற்ற இயற்கைவளமிக்க ஆஸ்திரேலிய நாட்டின் குடிமக்களான நாங்களும் ஆஸ்திரேலிய தினத்தை இன்று விமரிசையாகக் கொண்டாடுகின்றோம்.

எல்லோருக்கும் எங்களது அன்பு நிறைந்த ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!.

அன்புடன்
சாதாரணன்

இப்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் இணைப்புக்களில் ஆங்கிலத்தில் காணலாம்.

ஆஸ்திரேலியா தினவிபரங்கள்


ஆஸ்திரேலியா தின விருதுகள் பற்றிய விபரங்கள்


இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் விருதைப் பெறும் Neale Daniher AO அவர்களின் விபரங்கள்

No comments:

Post a Comment