இன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2026) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்த வருடம் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை, கேத்தரின் பென்னல்-பெக் (Katherine Bennell-Pegg AO) அவர்கள் பெற்றுக்கொள்கின்றார்..
இந்த விருது ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தலைமைத்துவமிக்க கௌரவமான குடிமக்களில் ஒருவருக்கு ஆஸ்திரேலிய தினத்தையொட்டி வருடம் தோறும் வழங்கப்படும் ஆஸ்திரேலியாவின் அதியுயர்வான விருதாகும்.
ஆஸ்திரேலிய விண்வெளித் திட்டத்தின் (Australia’s Space Program) கீழ் தகுதி பெற்ற முதல் ஆஸ்திரேலிய விண்வெளி வீராங்கனை (Astronaut) என்ற வரலாற்றுச் சாதனையை
கேத்தரின் பென்னல்-பெக் படைத்துள்ளார். இச்சாதனை வருங்கால சந்ததியினருக்கான புதிய தடங்களை உருவாக்கியுள்ளது.
கேத்தரின் பென்னல்-பெக் படைத்துள்ளார். இச்சாதனை வருங்கால சந்ததியினருக்கான புதிய தடங்களை உருவாக்கியுள்ளது.
சிறுவயது முதலே விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற லட்சியத்தை கேத்தரின் கொண்டிருந்தார். ஒரு விண்வெளிப் பொறியாளராக (Space Engineer), இவர் பல விண்வெளிப் பயணத் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் மேம்பாட்டிற்குப் பங்காற்றியுள்ளார். அடுத்த தலைமுறையினரை ஊக்குவிக்கவும், புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், பள்ளி மாணவர்கள் மற்றும் தொழில் துறைத் தலைவர்கள் மத்தியில் இவர் தொடர்ந்து விண்வெளித் தொழில்நுட்பதிற்கான விழிப்புணர்வு உரைகளை நிகழ்த்தி வருகிறார்.
இவ்விருதிற்கான ஏற்புரையில் ஆஸ்திரேலிய மாணவர்கள் STEM - அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளிலிருந்து விலகிச் செல்வதைச் சுட்டிக்காட்டிய அவர், விளையாட்டுகளில் காட்டும் அதே ஆர்வத்தை, "முயற்சி தான் செய்து பார்ப்போமே" ("give it a go") என்கின்ற மனப்பாங்கில் அறிவியல் மற்றும் கணிதத் துறைகளிலும் ஆஸ்திரேலியர்கள் வெளிப்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
ஆஸ்திரேலியாவின் வளர்ந்து வரும் விண்வெளித் துறையில் கேத்தரின் ஒரு உண்மையான முன்னோடியாகத் திகழ்கிறார். அவரது மன உறுதியும், வெற்றிபெற வேண்டும் என்ற உத்வேகமும் இளம் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைகின்றன.
இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதைப் பெறும்,
கேத்தரின் பென்னல்-பெக் (Katherine Bennell-Pegg AO) அவர்களை நாமும் வாழ்த்துவோமாக.
கேத்தரின் பென்னல்-பெக் (Katherine Bennell-Pegg AO) அவர்களை நாமும் வாழ்த்துவோமாக.
தெளிவான பளிங்கு நீலக்கடலால் சூழப்பட்ட, அழகான கடற்கரைகளும், தொன்மையான புராதனமிக்க பாறைகளும், மழைவனக்காடுகளும் நிறையப்பெற்ற இயற்கைவளமிக்க ஆஸ்திரேலிய நாட்டின் குடிமக்களான நாங்களும் ஆஸ்திரேலிய தினத்தை இன்று விமரிசையாகக் கொண்டாடுகின்றோம்.
எல்லோருக்கும் எங்களது அன்பு நிறைந்த ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!.
அன்புடன்
சாதாரணன்
இப்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் இணைப்புக்களில் ஆங்கிலத்தில் காணலாம்.
ஆஸ்திரேலியா தினவிபரங்கள்
ஆஸ்திரேலியா தின விருதுகள் பற்றிய விபரங்கள்
இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் விருதைப் பெறும் Katherine Bennell-Pegg AO அவர்களின் விபரங்கள்


No comments:
Post a Comment